நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையப் பகடிவதையை  முறியடிக்க குற்றவியல் சட்டம் 574யில் திருத்தம் கொண்டு வரப்படும்: சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்த அமைச்சர் அஸாலினா தகவல் 

கோலாலம்பூர்: 

இணையப் பகடிவதையை முறியடிக்கும் குற்றவியல் சட்டம் 574யில் திருத்தம் கொண்டு வரப்படும். எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் மக்களவை கூட்டத்தில் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை சட்டம், கழக சீர்த்திருத்த அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் கூறினார்

சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன் அது தொடர்பான ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒரு சிறப்பு பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். இந்த சிறப்பு பணிக்குழுவில் நான்கு அமைச்சுகளை உட்படுத்திய அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், இணையப் பகடிவதையைத் தடுக்கும் விதமாக தமது அமைச்சுடன் இலக்கவியல் அமைச்சு, தொடர்பு அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகிய அமைச்சுகளுடன் ஒத்துழைப்பு நல்கப்படும் என்று பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார் 

மேலும், இணையப் பகடிவதை தொடர்பான அனைத்துலக அளவிலான கலந்தாய்வு கூட்டங்கள், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றியும் சட்ட அமைச்சு கூட்டங்களை நடத்தும் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset