நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்துக்கள் தொடர்பான கோரிக்கைகளை அரசு செவிமடுக்கும் சக்தியை மலேசிய இந்து சங்கம் கொண்டிருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்: 

இந்துக்கள் தொடர்பான கோரிக்கைகளை அரசு செவிமடுக்கும் சக்தியை மலேசிய இந்து சங்கம் கொண்டிருக்க வேண்டும்.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்  கூறினார்.

மஇகாவுக்கு அடுத்த மிகப் பெரிய சங்கமாக மலேசிய இந்து சங்கம் விளங்குகிறது.

இச்சங்கத்தில் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இச்சங்கத்தின் பலமும் ஆற்றலும் அரசுக்கு புரிவது இல்லை.

இந்நிலை மாற வேண்டும். மலேசிய இந்துகள் விவகாரம் என்றால் அதற்கு மலேசிய இந்து சங்கம் தான் பிரதிநிதி என்ற நிலை உருவாக வேண்டும்.

நாட்டில் அதிகமான இந்திய மாணவர்களின் கல்விக்கு உதவி வழங்கியது மஇகா தான்.

ஆனால் நேற்று மழைக்கு முளைத்தவர்கள் எல்லாம் மஇகா என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு முறையாக ஆவணங்களும் பதிவுகளும் இல்லாததே அதற்கு காரணம்.மஇகா செய்த தவற்றை மலேசிய இந்து சங்கம் செய்யக் கூடாது. 

நாட்டில் அதிகமான மாணவர்கள் திருமுறை படிப்பதற்கும் இந்து சமயத்தை பாதுகாப்பதற்கும் இந்து சங்கம் தான் காரணம்.

ஆகையால் எத்தனை மாணவர்கள் பயன் பெற்றனர் என்பதை இந்து சங்கம் முறையாக பதிவு செய்து வைக்க வேண்டும்.

காரணம் இந்து சங்கம் என்ன செய்தது என்று கேட்பவர்கள் சங்கத்திற்கு எதையும் செய்திருக்க மாட்டார்கள். இந்த பதிவுகள் அவர்களின் வாயை அடைக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset