நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வங்கதேசத்தில் ஊரடங்கு: வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு உத்தரவு

டாக்கா:

வங்கதேசத்தில் பரவி வரும் பயங்கர வன்முறையைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் விடுதலைப் போரில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

அப்போது இந்திய உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Bangladesh students protest updates: 39 killed, 30 journalists injured;  schools, colleges shut | World News - Hindustan Times

இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் மாணவர்களின் போராட்டம் வெடித்தது.

இந்தப் போராட்டத்தில் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டாக்காவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது  கண்ணீர் குண்டுகளை வீசி கலைத்தனர்.

டாக்கா அருகே உள்ள சிறையை உடைத்து ஒரு கும்பல் கைதிகளை விடுவித்தது.
பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கிருந்த சுமார் 300 மாணவர்கள் இந்தியா திரும்பினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset