நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மகளிர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா

தம்புலா: 

மகளிர் ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகளில் இந்தியா வென்றது. 

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தீப்தி சர்மா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.

இலங்கையில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது நேபாளம். இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. 

இந்தப் போட்டி தம்புலாவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 

ரேணுகா சிங், பூஜா, ஸ்ரேயங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பாகிஸ்தான் வீராங்கனை சயிதா ரன் அவுட் ஆனார்.

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த ஸ்மிருதி மற்றும் 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த ஷபாலி என இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

தயாளன் ஹேமலதா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

14.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா.

தொடர்புடைய செய்திகள்

+ - reset