செய்திகள் மலேசியா
ஐ.நா மன்றத்தில் ஒலிக்கப் போகிறது 'மலேசிய குடும்பம்' கோட்பாடு: பிரதமரின் உரையில் இடம்பெறும்
புத்ராஜெயா:
'மலேசிய குடும்பம்' எனும் செய்தியை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் உலக அரங்கிற்கும் கொண்டு செல்ல இருக்கிறார். ஐ.நா மன்றத்தின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தில் நாளை உரையாற்றும்போது இந்தச் செய்தியை அவர் குறிப்பிட உள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், முன்பே பதிவு செய்யப்பட்ட காணொளிப் பதிவாக பிரதமரின் உரை பொதுச்சபை கூட்டத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பொது விவாதத்தின்போது 'உலகம் ஒரு குடும்பம்' எனும் கருப்பொருளை பிரதமர் முன்னிலைப்படுத்துவார். மேலும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு எவ்வாறு உலகக் குடும்பத்துடன் 'மலேசிய குடும்பம்' இணைந்து செயலாற்றும் என்பது குறித்தும் விவரிப்பார்.
"மேலும், பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை மறு உறுதி செய்வதுடன், ஐ.நா சபை சீர்திருத்தங்கள், நிலையான மேம்பாட்டு இலக்குகள் மற்றும் உலகளாவிய போர் நிறுத்தம் குறித்தும் பிரதமர் தமது உரையில் குறிப்பிடுவார்," என வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 19, 2025, 1:09 pm
ஜாலான் கிளாங் லாமாவில் குடிநுழைவு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: 90 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
December 19, 2025, 1:01 pm
தொடரும் கனமழை: 6 மாநிலங்களில் 14,905 பேர் வெள்ளத்தால் பாதிப்பு
December 18, 2025, 8:44 pm
2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஸ்டீவன் சிம்
December 18, 2025, 6:15 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை
December 18, 2025, 6:14 pm
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்
December 18, 2025, 5:02 pm
உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை
December 18, 2025, 1:53 pm
முதலாளிகளைத் தண்டிக்காதீர்கள்; பிரிவு 45 எஃப்ஐ அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சைட் ஹுசேன்
December 18, 2025, 1:48 pm
