
செய்திகள் விளையாட்டு
ஆசியக் கிண்ணப் பெண்கள் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
தம்புல்லா:
இன்று 9-ஆவது ஆசியக் கிண்ணப் பெண்கள் (20 ஓவர்) கிரிக்கெட் போட்டி இலங்கையிலுள்ள தம்புல்லாவில் தொடங்குகிறது.
இப்போட்டி ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று 'ஏ' பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், தீப்தி ஷர்மா, ஸ்ரேயாங்கா பட்டீலும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் ஆடி 17-ல் வெற்றி பெற்று வலுவாக காணப்படும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருவதுடன், போட்டி தொடர தொடருவதுடன், போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும்.
இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில் 11-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 18, 2025, 9:30 am
2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட்டுகள் பத்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகின: FIFA தகவல்
October 18, 2025, 8:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 17, 2025, 9:21 am
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்: பட்டியலில் யமல் ஆச்சரியப்படுகிறார்
October 17, 2025, 7:09 am