
செய்திகள் உலகம்
எக்ஸ் - ஸ்பேஸ் எக்ஸ் தலைமையிடத்தை அதிரடியாக மாற்றும் எலான் மஸ்க்
வாஷிங்டன்:
எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.
விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாநிலத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கக்கூடாது.
இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும் பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 12, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
October 11, 2025, 12:25 pm
டிரம்பின் கனவு கலைந்தது: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு கிடைத்தது
October 11, 2025, 12:02 pm
சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத், மஸ்ஜித் சுல்தான், இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஆதரவில் இன்று மீலாது விழா
October 11, 2025, 11:53 am
விமானத்தில் அசைவ உணவால் உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு வழக்கு
October 11, 2025, 8:17 am