நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

எம்.டி. வாசு தேவன் நாயரின் 91ஆவது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த கலைத் துறை

ஞானவயோதிகனின் குழந்தைமை தமிழ்  மண்ணிலிருந்து மலையாள மண்ணைப் பார்த்து சற்றே அசூயைக் கொள்ளும் விஷயம் மலையாள இலக்கிய உலகுக்கும் மலையாள திரை உலகுக்கும் இடையில் இழையோடும் ஆரோக்கியமான உறவு. 

தமிழில் அப்படியான உறவுநிலை ஒன்று உருவாகவே இல்லை. எழுத்திலிருந்து தமிழ்த்திரை நோக்கி நகர்ந்தவர்களும் சினிமாவின் எல்லா போலிமைகளுக்கும்  தங்களை ஒப்புக்கொடுக்கும் நிலையே இருக்கிறது. 

பண்ணை யார்விட்ட குசுவைக்கூட  பெருமித மாய்பேசும் தொழிலாளி மனநிலையே தமிழ் எழுத்தாளர்களிடம் தூக்கலாக இருக்கிறது.

இரண்டு மூன்று நாட்களாக இதுகுறித்த அங்கலாய்ப்பும் முகநூலில் வெளிப்படுகிறது. 

May be an image of 4 people, dais and text

போகன் சங்கர், பேராசிரியர் அ. ராமசாமி இருவரும் இது குறித்து பதிவு களை வெளிட்டுள்ளார்கள். ஜெயகாந் தனின் ;'சினிமாவுக்குப் போன சித்தாளு' எனும் புனைவுத்தலைப்பு மீண்டும் மேல் வருகிறது. 

மலையாள இலக்கியத்தின் மூத்த ஆளுமை ஞானபீடம், பத்மவிபூசன் என விருதுகளை சிறப்பித்த எம்.டி. வாசு தேவன் நாயரின் 91 –ஆவது பிறந்த நாளை மலையாளத் திரையுலகினர் அத்தனை அழகாகக் கொண்டாடினார் கள். முன் வரிசை நடிகர்கள் மிக இயல்பாக இருந்தார்கள். 

தங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரன் ஒருவரை மகிழ்விப்பதுபோல் எம்.டி.வி. யை  மகிழ்வித்தார்கள்.

91 வயதைத்தொடும் எம்.டி. வாசுதேவன் நாயர் மறுபடியும் குழந்தையாகி இருக் கிறார். 

நிகழ்வில் நடிகர் மம்முட்டியின் மார்பில் சற்றுநேரம் அவர் தலைசாய்த் திருந்த காட்சி அத்தனை நெகிழ்வானது . 

மலையாள ஊடகம் ஒன்று எம்.டி.வி.யை   ஞானவயோதிகன் என்று அழைத்தது. அழகான சொல் .

- தக்கலை ஹாமீம் முஸ்தஃபா

தொடர்புடைய செய்திகள்

+ - reset