நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு விவகாரத்தை  அரசியலாக்க வேண்டாம்: டத்தோ ரமணன்

சுங்கைபூலோ:

மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோ ஆர். ரமணன் இதனை தெரிவித்தார்.

எஸ்பிஎம் தேர்வில் 10ஏ அதற்கும் மேல் எடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை ஒது சிலர் சர்ச்சையாக்கி வருகின்றர். 

பூமிபுத்ரா மாணவர்களை பாதிக்காமல் எப்படி இந்த வாய்ப்பு மற்ற மாணவர்களுக்கு கிடைக்கும் என கேள்வி எழுப்புகிறார்கள்.

என்னை பொருத்த வரையில் பிரதமர் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அதே வேளையில் நமது மாணவர்கள் முறையாக அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படியே தகுதி இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது குறித்து தகவல் கொடுங்கள்.

நிச்சயம் அம்மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.

ஆகையால் இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம்.

இதனால் மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கும் என்று டத்தோ ரமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset