
செய்திகள் உலகம்
கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஐஸ்கிரீம் வாகனத்தின் காணொலி வைரல்
லண்டன்:
இங்கிலாந்து கடற்கரையில் ஐஸ்கிரீம் வாகனம் கடலில் அடித்து செல்லப்பட்ட காணொலி பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இங்கிலாந்தின் கார்ன்வாலிலுள்ள ஒரு பிரபல கடற்கரையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்காக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சம்பவத்தன்று கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஐஸ்கிரீம் வாகனத்தைக் கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் அந்த வாகனத்தை வெளியே இழுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் முடியவில்லை.
இதைத்தொடர்ந்து கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஐஸ்கிரீம் வாகனம் மீட்கப்பட்டது.
சம்பவம் நடந்த போது வாகனத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பான காணொலி இணையத்தில் வைரலானது. பயனர்கள் பலரும் இந்தச் சம்பவத்தை மிகவும் விசித்திரமானது எனப் பதிவிட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am