
செய்திகள் இந்தியா
கேரளம்: பழைய பாரம்பரிய நிலைக்கு மாற்றப்படும் சேரமான் பள்ளிவாசல்
திருச்சூர்:
இந்தியாவின் முதல் மசூதியாக கருதப்படும் கேரளத்தில் உள்ள சேரமான் ஜும்மா பள்ளிவாசல். பழைய பாரம்பரிய நிலைத் தோற்றத்திலேயே மாற்றப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.
கி.பி. 629-இல் கட்டப்பட்ட இந்த மசூதியின் பழமை தோற்றத்தை ஏற்படுத்த கடந்த 30 மாதங்களாக நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த பள்ளிவாசலை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைக்க உள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் தாலுக்காவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சேரமான் மசூதியை ரூ.1.14 கோடியில் முன்பு இருந்த தோற்றத்திலேயே புதுப்பொலிவு செய்ய, 1974-இல் கட்டப்பட்ட புதிய கட்டுமானங்களை இடித்துவிட்டு பழைய புகைப்படங்களில் உள்ளதைப்போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநில அரசு அதிகாரி நவ்சத் தெரிவித்தார்.
மசூதியின் வளாகத்தில் ரூ.1 கோடியில் இஸ்லாமிய பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புதுப்பொலிவு பெறும் சேரமான் ஜும்மா மசூதியை ஏராளமானோர் கண்டு ரசித்து வருவதாகவும் நவ்சத் தெரிவித்தார்.
சேர நாட்டை ஆண்டு வந்த வந்த சேரமான் பெருமாள், அரேபிய நாட்டிற்கு சென்று இறைத்தூதர் முகமது நபியைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். மீண்டும் நாடு திரும்பும்போது ஓமனில் உயிரிழந்தார்.
அவரது கட்டளையை ஏற்று நபி தோழர்களில் ஒருவரான மாலிக் தின் தினார் கி.பி. 629-இல் இந்தியாவில் மசூதியைக் கட்டினார் என்றும் அதற்கு அவரது நினைவாக சேரமான் ஜும்மா மசூதி என பெயர் சூட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த மசூதிதான் இந்திய துணைக் கண்டத்திலேயே முதல் மசூதியாக கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm