
செய்திகள் மலேசியா
கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு 7 நாட்களில் தீர்வை வழங்க வேண்டும்: அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை
கோலாலம்பூர்:
பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலையிட்டு 7 நாட்களில் தீர்வை வழங்க வேண்டும்.
டத்தோ கலைவாணர் தலைமையிலான அரசு சாரா அமைப்புகள் இக் கோரிக்கையை முன்வைத்தன.
சாலை விரிவாக்கத்திற்கு வழிவிடும் வகையில் மேம்பாட்டு நிறுவனம் கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு பகுதியை கோருகிறது.
700 மாணவர்கள் கல்வி பயின்று வரும் பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு சதுர அடிகூட எடுக்கக் கூடாது.
இன்று நாடாளுமன்ற வளாகத்தின் முன் திரண்ட தமிழ் அமைப்புகளுக்கு தலைமையேற்ற டத்தோ கலைவாணர் இதனை கூறினார்.
இது தொடர்பான மகஜர் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழன் உதவும் கரங்கள் தலைவர் முரளி, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மதியழகன், செல்வேந்திரன், தமிழ் கலை உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இம்மகஜர் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பிரதமர் இந்த விவகாரத்திற்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இல்லையென்றால் பள்ளியை காக்கும் போராட்டம் தொடரும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm