நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ மோகனுடனான புனிதனின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோலாலம்பூர்:

டத்தோ மோகனுடனான புனிதனின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஇகாவில் அசைக்க முடியாத முன்னணித் தலைவராக டத்தோ டி. மோகன் விளங்கி வந்தார்.

ஆனால் அண்மையில் நடைபெற்ற கட்சியின் உதவித் தலைவருக்கான தேர்தலில் அவர் தோல்வி கண்டார்.

இது மஇகா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டத்தோ மோகனின் தோல்வி இந்திய சமுதாயத்திற்கும் கட்சிக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று ம இகா தேசிய முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன், அதன் துணை தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் டத்தோ டி. மோகனை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களை புனிதன் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த படங்கள் வெளியான சிறிது நேரத்தில் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய இந்திய மக்கள் கட்சியில் டத்தோ மோகன் இணைகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

டத்தோ மோகன் நீண்ட கால நண்பர். இந்திய சமுதாயத்தின் நலன்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக புனிதன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset