நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கின்றாரா தமிழ்ப்பள்ளி தொடர்பான ஆர்பாட்டத்திற்கும் பள்ளி தரப்பிற்கும் தொடர்பில்லை; பள்ளி உடைப்படுகிறது என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரபாகரன் 

கோலாலம்பூர் -

கின்றாரா தமிழ்ப்பள்ளி தொடர்பான ஆர்பாட்டத்திற்கும் பள்ளி தரப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

அதே வேளையில் பள்ளி உடைப்படுகிறது என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறினார்.

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட பின்னர் அறிக்கைகளை வெளியிடுங்கள்.

அதை விடுத்து பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம்.

கின்றாரா தமிழ்ப்பள்ளி உடைப்படுகிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறாதா என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

சாலை விரிவாக்கத்திற்கு வழிவிடும் வகையில் பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு பகுதியை எடுத்து கொள்ள மேம்பாட்டு நிறுவனம் கோரிக்கை முன் வைத்துள்ளது.

அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

குறிப்பாக சுமூகமான முறையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதற்குள் பள்ளி உடைப்படப் போகிறது என ஆர்பாட்டங்கள் செய்வதால் இப்பேச்சுவார்த்தையை தான் பாதிக்கும்.

ஆகவே இதுபோன்ற வதந்திகள் பரப்புவதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் கின்றாரா தமிழ்ப்பள்ளி வாரியத் தலைவர் கோபி குருசாமி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணைகள் நடத்த வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset