நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கோலாலம்பூர் இலங்கைத் தூதரகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கோலாலம்பூர்:

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தில் அந் நாட்டுத் தூதர் முஹம்மது ரிச்வி தலைமையில் நேற்று (4th Feb 2026) தடைபெற்றது.

நிகழ்ச்சியில் மௌலவி டாக்டர் சயித் ஹுசைன் ஆப்தீன் சுருக்கமான பிரார்த்தனையுடன் கூடிய உரை நிகழ்த்தினார்.

—அருளாளன், அன்புடையோன், கருணையுடையோனுமாகிய் அல்லாஹ்வின் நாமத்தால் ஆரம்பிக்கின்றேன்.

“ஒரு சமூகத்தினர் தங்களுக்குள்ளதை மாற்றிக்கொள்ளும்வரை அல்லாஹ் அவர்களின் நிலையை மாற்றமாட்டான்.”
இது எப்போதும் எம்மிடமிருந்து நான் முதலில் ஆரபிக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. 

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவும், சர்வதேசக் கண்ணோட்டத்துடனும் ஒரு உண்மையை எவ்வித சந்தேகமுமின்றி கூற விரும்புகிறேன். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு, அது முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்டதினால் இங்கு பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாகக் கடைப்பிடிக்கின்றனர் என்பதுப்போலதான் 
இலங்கை ஒரு புத்தநாடு. அது புத்தமத மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும் அதேவேளை, அனைத்து மதங்களையும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அரசியலமைப்பு உறுதி செய்கிறது.

கடந்த 78 ஆண்டுகளாக, இலங்கையும் அதன் மக்களும் போராட்டம், வேதனை, அழிவு, வறுமை, அநீதி, ஊழல், இனவெறி, வன்முறை, பொய்கள்,  இரத்தப் சிந்தல், கொலை, கொள்ளைகள் போன்றவற்றை  அனுபவித்துள்ளனர்.
இவை அனைத்தும் நம் நாட்டுத் தலைவர்கள், உள்நாட்டு தோல்விகள், ஊழல் போன்றவற்றின் விளைவுகள் மட்டுமல்ல; சிக்கலான சர்வதேச தலையீடுகளின் விளைவுகளும்கூட.

ஒரு தேசமாக, இலங்கை பிரஜைகளாக நாம் கனத்த இதயங்களையும் ஆழமான காயங்களையும் சுமந்துகொண்டு நிற்கிறோம்.
நாம் அழுவது வெறுப்பினால் அல்ல.
நம் தாய்நாட்டின் மீது கொண்ட அன்பினாலும் 
உலகில் மிக சிறந்த இடமான, அழகான தீவான இலங்கையின்  மீது கொண்ட காதலினாலே ஆகும்.

உலக வரலாற்றைப் பார்க்கும் போது, சில மிக வேதனையூட்டும் கேள்விகள் நம்மை துளைத்தெடுக்கின்றன:

அரேபியாவில் உமர் இப்னு அல்-கத்தாப், அமெரிக்காவில் அபிரகாம் லிங்கன் 
தென்ஆபிரிக்காவில் நெல்சன் மண்டேலா,
இந்தியாவில் மகாத்மா காந்தி, சிங்கப்பூரில் லீ குவான் யூ, மலேசியாவில் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதைப் போன்றோரை —
இலங்கை ஏன் உருவாக்க முடியவில்லை?

சரியான காலத்தில், தூரநோக்கும், கொள்கைப்பற்றும், நேர்மையும் கொண்ட தலைமை உருவாகியிருந்தால், இன்றைய தினம் இலங்கை உலகில் மிகச் சிறந்த வளர்ந்த நாடுகளில் ஒன்றாக பெருமையுடன் நின்றிருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச மேடைகளிலும், இலங்கைப் பாஸ்போர்ட் இன்று சிங்கப்பூர் அல்லது மலேசிய பாஸ்போர்ட் போல உலகின் முதல், இரண்டாம் அல்லது மூன்றாம் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் ஒன்றாக இருந்திருக்கும்.

இது குற்றம் சாட்டும் நேரமல்ல. இது பொறுப்புணர்வும், தைரியமான நடவடிக்கையும் தேவைப்படும் காலம்.

இனிமேலும்  நாம் அமைதியாக இருந்து தொடர்ந்து இப்படியே தோல்வியடைந்து கொண்டு சென்றால், எதிர்கால தலைமுறைகள் அரசியல்வாதிகளை மட்டும் அல்ல — நம்மைப் போன்ற சமயத் தலைவர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், சமூகத் தலைவர்கள்
செயல் தேவைப்பட்ட நேரத்தில் மௌனம் காத்தோம் என்பதற்காக, நம்மையும் குற்றம் சாட்டுவார்கள். 

எனவே மிக முதன்மையானதும் அத்தியாவசியமானதும் ஆன தீர்வுகள் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது:
அனைத்து சமய அதிகாரிகள், தலைவர்கள, சமயப் பணியாளர்கள், கல்வியாளர்கள் விழித்தெழுந்து, ஒன்றிணைந்து, சரியாக செயல்பட வேண்டிய கட்டம் இது.

நம் தாய்நாட்டை காக்கவும் காப்பாற்றவும் அவசரமான செயல்திட்டத்தில் இறங்க வேண்டும்.

இங்கு இன்று கூடியுள்ள அனைத்து சமய மற்றும் கல்வித் தலைவர்கள், அறிவாளிகள் அனைவரிடமும், முழு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நான் பணிவுடன் வேண்டிக் கொள்வது:

இந்த தருணத்தில் நாம் தோல்வியடைந்தால், மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.
எந்த எதிர்கால அரசாங்கமும் அல்லது அரசியல்வாதிகளால் மட்டும் இலங்கையை மீட்க முடியாது போகலாம்.

ஆகையால், இந்த நாட்டை உண்மையிலேயே நேசிக்கும், இதற்காக நன்மை விரும்பும்,
இதன் எதிர்காலத்திற்காக தனிப்பட்ட சௌகரியங்களைத் துறக்கத் தயாராக இருக்கும்
நல்ல உள்ளங்களுடன் நாம் ஒன்றிணைவோம்.

அல்லாஹ் எங்களுக்கு பொறுப்பை உணரும் தெளிவையும், உடனடியாக செயல்படும் தைரியத்தையும், இலங்கையின் நலனுக்காக
உழைப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்படும் ஞானத்தையும் அளிப்பானாக.

இவ்வாறு அவர் பேசினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset