நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷியாவில் பிரதமர் மோடிக்கு புதின் விருந்து

மாஸ்கோ:

ரஷியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் இரவு விருந்து அளித்தார்.

மாஸ்கோ விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு இந்திய வம்சாவளியினர் மோடிக்கு நடன நிகழ்ச்சிகளை அளித்து வரவேற்றனர்.
அங்கிருந்து நோவோ ஓகரேவோவில் புதினின் பங்களாவுக்கு சென்ற மோடிக்கு தனிப்பட்ட முறையில் இரவு விருந்தளிக்கப்பட்டது.

அப்போது மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியாவின் வளர்ச்சி குறித்து பெருமிதம் கொள்வதாக புதின் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

புதினுடன் மோடி இரு தரப்பு நல்லுறவு பேச்சுவார்த்தையை இன்று நடத்துகிறார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset