நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் போரின் நோக்கம் குறித்து குழப்பம்; அமெரிக்க அரசு மீது சரமாரியாக கேள்வி எழுப்பிய ஜனநாயகக் கட்சி: பதில் சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப் அதிகாரிகள்

வாஷிங்டன்: 

ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போரின் நோக்கமும், இறுதி இலக்கும் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை தெளிவான விளக்கம் வழங்கவில்லை என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போர் தொடங்கிய 11 நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற இரகசிய விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செனட் உறுப்பினர் ரிச்சர்ட் புளூமெந்தால் கடும் அதிருப்தி தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளில் தான் கலந்து கொண்ட எந்தக் கூட்டத்தையும் விட இது அதிக ஏமாற்றத்தை அளித்ததாக அவர் கூறினார்.

ஈரான் போரைக் குறித்து அமெரிக்க மக்களுக்கு அரசு தெளிவான காரணமும் இலக்கையும் விளக்க வேண்டிய கடமை உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் அமெரிக்கப் படைகள் ஈரானில் நிலைநிறுத்தப்பட வாய்ப்பு இருப்பது குறித்து கவலை இருப்பதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு செனட் உறுப்பினர் எலிசபெத் வாரன் கூறுகையில், இந்தப் போர் ஏன் தொடங்கப்பட்டது, அதன் இலக்குகள் என்ன என்பதையும், அதை எவ்வாறு அடைய திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் அரசு விளக்க முடியவில்லை என்றார்.

போரின் செலவினம் மிக அதிகமாக இருப்பதாகவும், முதல் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகியுள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அமெரிக்காவில் சுகாதார உதவித் தொகைகள் குறைக்கப்பட்ட நிலையில் ஈரானை தாக்க தினமும் பெரிய தொகை செலவிடப்படுவது குறித்து அவர் விமர்சித்தார்.

செனட் உறுப்பினர் ஜாக்கி ரோசன் கூறுகையில், இரகசிய விளக்கக் கூட்டம் பற்றிய விவரங்களை முழுமையாக பகிர முடியாத நிலையில் இருந்தாலும், கேட்ட தகவல்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் போரின் இறுதி நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset