செய்திகள் உலகம்
மோஜ்தபா கமெனி பாதுகாப்பாக உள்ளார்
தெஹ்ரான்:
ஈரானின் புதிய உச்சத் தலைவர் மோஜ்தபா கமெனி இஸ்ரேல், அமெரிக்க மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்ததாக தகவல்கள் வெளியானாலும், அவர் “பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளார்” என்று ஈரான் அதிபரின் மகன் தெரிவித்தார்.
“மோஜ்தபா கமெனி காயமடைந்ததாக நான் ஒரு செய்தியைக் கேட்டேன். அதுகுறித்து தொடர்புடையவர்களுடன் நான் விசாரித்தேன். இறைவனின் அருளால் அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளார்,” என்று ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான் அவர்களின் மகன் யூசுப் பெசேஷ்கியான் இன்று தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்ட பதிவில் கூறினார்.
மோஜ்தபா, இஸ்லாமிய குடியரசின் தலைவராக இருந்த அலி கமெனியின் மகன் ஆவார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான்மீது அமெரிக்கா–இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அலி கமெனி உயிரிழந்தார். அந்த தாக்குதலே பின்னர் மேற்கு ஆசியாவில் போரைத் தூண்டியது.
56 வயதான அத்தலைவர் பொதுமக்கள் முன்னிலையில் அரிதாகவே தோன்றும் நபராகவும், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் அரிதாகவே உரையாற்றுபவராகவும் அறியப்படுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ஈரானின் உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மக்களிடம் உரையாற்றவோ அல்லது எழுத்துப்பூர்வமான அறிக்கையொன்றை வெளியிடவோ இல்லை.
இன்றைய செய்தியில், 'The New York Times' நாளிதழ், பெயர் குறிப்பிடப்படாத மூன்று ஈரான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, மோஜ்தபா சில காயங்களுக்கு உள்ளானதாக, குறிப்பாக காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. இருப்பினும் அவர் நலமாக இருப்பதாகவும், தற்போது மிகவும் பாதுகாப்பான இடத்தில் குறைந்த அளவிலான தொடர்புகளுடன் தங்கி இருப்பதாகவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 5:36 pm
உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரானுக்கு அழைப்பு: டொனால்ட் டிரம்ப்
March 11, 2026, 5:14 pm
ஈரான் போர் தீவிரமாகும் என ஆஸ்திரேலியா எதிர்பார்ப்பு: மத்திய கிழக்கு தூதரகங்கள் சில மூடப்பட்டன
March 11, 2026, 5:05 pm
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் விழுந்ததில் இந்தியர் உட்பட நால்வர் காயம்
March 11, 2026, 4:30 pm
தெஹ்ரானில் நச்சு ‘கருப்பு மழை’: ஐ.நா. எச்சரிக்கை
March 11, 2026, 3:37 pm
எரிசக்தி நெருக்கடி: பாகிஸ்தானின் தீவிர நடவடிக்கை
March 11, 2026, 2:47 pm
ஈரான் யுத்த நிறுத்தத்தை கோரமாட்டாது
March 11, 2026, 11:39 am
