செய்திகள் உலகம்
“எண்ணெய் விலை உயர்ந்தாலும் எரிபொருள் பற்றாக்குறை இல்லை”: இந்தோனேசியா அமைச்சர் அறிவிப்பு
ஜகார்த்தா:
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலால் உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் அமைதியாக இருக்கவும் பீதி கொண்டு எரிபொருள் வாங்குவதைத் தவிர்க்கவும் இந்தோனேசிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் எரிசக்தி, கனிம வள அமைச்சர் பஹ்லில் லஹாடாலியா கூறுகையில், உள்நாட்டு எரிபொருள் கையிருப்பு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளதாக உறுதிப்படுத்தினார்.
21 முதல் 25 நாட்கள் வரை உள்ள கையிருப்பு குறித்து முன்பு கூறப்பட்டதாவது சேமிப்பு திறனை மட்டுமே குறிக்கிறது என்றும், கூடுதல் எரிபொருள் விநியோகம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் தொழில்துறை நடவடிக்கைகளும் இறக்குமதிகளும் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகளவில் எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டொலரைத் தாண்டியதைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தோனேசியா பெரும்பாலும் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதே நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் பொருட்கள் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பெறப்பட்டு நாட்டிற்குள் சுத்திகரிக்கப்படுகின்றன என அமைச்சர் தெரிவித்தார்.
உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்தாலும், ஹரிராயா பண்டிகை வரை மானிய எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார்.
இதற்கிடையில் நிதி அமைச்சர் பூர்பயா யுத்ஹி சாதேவா கூறுகையில், உலக எண்ணெய் விலை உயர்வை அரசு நெருக்கமாக கவனித்து வருவதாகவும், நிதி கொள்கையில் மாற்றம் செய்வதற்கு முன் அதன் நிலையான போக்கை மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள் மானியம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சராசரி 70 அமெரிக்க டொலர் என்ற கணிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், சந்தையின் குறுகிய கால மாற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அவர் விளக்கினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 5:36 pm
உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரானுக்கு அழைப்பு: டொனால்ட் டிரம்ப்
March 11, 2026, 5:14 pm
ஈரான் போர் தீவிரமாகும் என ஆஸ்திரேலியா எதிர்பார்ப்பு: மத்திய கிழக்கு தூதரகங்கள் சில மூடப்பட்டன
March 11, 2026, 5:05 pm
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் விழுந்ததில் இந்தியர் உட்பட நால்வர் காயம்
March 11, 2026, 4:30 pm
தெஹ்ரானில் நச்சு ‘கருப்பு மழை’: ஐ.நா. எச்சரிக்கை
March 11, 2026, 4:29 pm
மோஜ்தபா கமெனி பாதுகாப்பாக உள்ளார்
March 11, 2026, 3:37 pm
எரிசக்தி நெருக்கடி: பாகிஸ்தானின் தீவிர நடவடிக்கை
March 11, 2026, 2:47 pm
