நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் விழுந்ததில் இந்தியர் உட்பட நால்வர் காயம்

துபாய்: 

ஈரான்–அமெரிக்கா மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்த டிரோன்களால் இந்தியர் ஒருவரை உட்பட நால்வர் காயமடைந்தனர்.

துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்ததாவது, இரண்டு ட்ரோன்கள் விமான நிலையம் அருகே விழுந்ததில் இந்தியர் ஒருவருக்கு மிதமான காயம் ஏற்பட்டது. மேலும் கானா நாட்டைச் சேர்ந்த இருவரும் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் லேசான காயங்களுக்குள்ளாகினர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகும் விமான சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகின் மிகப் இலகுவான சர்வதேச பயண மையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தில், மோதல் சூழ்நிலையிலும் விமான அட்டவணையை சீராக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் பல இலக்குகளை நோக்கி ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பல ட்ரோன் தாக்குதல்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset