நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் யுத்த நிறுத்தத்தை கோரமாட்டாது

தெஹ்ரான்: 

இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமெரிக்க நலன்களை எதிர்த்து புதிய தாக்குதல் அலையை தொடங்கிய ஈரான், யுத்த நிறுத்தத்தைக் கோரமாட்டாது என்ற நிலைப்பாட்டில் நிலைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்மூஸ் கடல் தொடர்பாக தனது மிரட்டல்களை அதிகரித்தாலும், இந்நிலையில் மாற்றமில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் பாராளுமன்றத்தின் பேச்சாளரும் புரட்சிகர காவல்படையின் முன்னாள் உயர் தளபதியுமான முஹம்மத் பாகேர் கலிபாப், X சமூக வலைதளத்தில் ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவில் இதனை உறுதி செய்தார்.

“நாம் யுத்த நிறுத்தத்தைக் கோரமாட்டோம்.

 கைதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் ஈரானைத் தாக்குவதைத் தடுக்கும் வகையில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னர், புதன்கிழமை காலையில் ‘மிகவும் கடுமையான, தொடர்ச்சியான’ மூன்று மணி நேர தாக்குதல் ஒன்றை ஈரான் தொடங்கியுள்ளது.

AFP பத்திரிகையாளர்கள் சைரன் ஒலிகளையும் தாக்குதல் சத்தத்தையும் பைதுல்முகத்தீஸ் நகரத்தில் பதிவு செய்தனர்.

G7 தலைவர்கள் புதன்கிழமை காணொலி மாநாட்டில் பொருளாதார தாக்கங்களை, குறிப்பாக 'எரிசக்தி நிலை' குறித்து, விவாதிக்கவிருப்பதாக பிரான்ஸ் அதிபர் அலுவலகம் தெரிவித்தது. IEA மிகப்பெரிய எண்ணெய் காப்பக வெளியீட்டை பற்றிய முடிவையும் எடுக்கவிருப்பதாக Wall Street Journal தெரிவித்தது.

அமெரிக்கா, செவ்வாய்க்கிழமை ஹார்மூஸ் கடற்பகுதியில் உள்ள ஈரானிய கப்பல்களைத் தாக்கியதாகவும், எரிசக்தி வழித்தடம் மூடியதாகவும் கூறியது.

இஸ்ரேலும், பைரூத், தெஹ்ரானில் மீண்டும் தாக்குத்தல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset