செய்திகள் இந்தியா
5 நூற்றாண்டுகள் பழமையான திருடப்பட்ட ஓவியம் 18 கோடி ரூபாய்க்கு ஏலம்
சென்னை:
5 நூற்றாண்டுகளுக்கு முன்பு டைட்டியன் என்ற இத்தாலிய ஓவியர் வரைந்த வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் தற்போது 17.5 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.
இது தோராயமாக இந்திய மதிப்பின்படி 18 கோடி ரூபாய் ஆகும்.
Rest on the Flight into Egypt என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓவியத்தை டைட்டியன் 20 வயதாக இருக்கும் பொழுது 1510 ஆண்டில் வரைந்துள்ளார்.
இரண்டு அடி அகலத்தில் மரக்கட்டையில் வரையப்பட்டுள்ள அந்த ஓவியத்தில் மேரி குழந்தை ஜீசஸ் ஐ தொட்டிலில் போட்டு ஆட்டுவதுமாக, அருகில் ஜோசப் அமர்ந்திருப்பதுமாக வரையப்பட்டுள்ளது.
இந்தk கலை படைப்பு 1995 ஆம் ஆண்டு வில்ட்ஷையரிலுள்ள லாங்லியட் ஹவுஸில் இருந்து திருடப்பட்டது.
7 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பிரபலமான படைப்பை டிடெக்டிவ் சார்லஸ் ஹில் கடுமையாக போராடி கண்டுபிடித்துள்ளார். ஏற்கனவே சார்லஸ் ஹில் என்பவர் எட்வர்ட் மஞ்சின் The Scream ஐ மீட்டெடுத்து தந்ததற்கு பெயர் போனவர்.
இவர் Rest on the Flight into Egypt ஓவியத்தை லண்டனில் ஒரு பிளாஸ்டிக் பையில் கண்டுபிடித்துள்ளார். அந்த ஓவியத்தில் எந்த ஒரு சட்டகமும் இல்லை என்றாலும் கூட அதில் பெரிய அளவில் சேத எதுவும் ஏற்படவில்லை.
The Rest on the Flight into Egypt ஓவியத்தை கிறிஸ்டி என்பவர் ஏலத்தில் எடுத்தார். இது தோராயமாக 12 மில்லியன் பவுண்டுகள் முதல் 15 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலத்திற்கு போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இது அந்த ஓவியத்தின் விலையைக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை நிரூபித்து 17.5 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டது.
இந்த ஓவியம் லாங்லியட் எஸ்டேடிற்கு சொந்தமானதாக இருந்தது. பெயிண்டிங்கௌ இப்போது ஏலத்திற்கு விடுவது லாபகரமானதாக இருக்கும் என்று அந்த எஸ்டேட்டுக்கு தற்போதைய உரிமையாளர் கூறியுள்ளார்.
மேலும் அவர் லாங்லியட்டில் நாங்கள் குறிப்பிடத்தக்க நீண்ட கால முதலீட்டு யுக்தியைப் பின்பற்றி வருகின்றோம். தனித்துவமான பொருட்களுக்கு அதிக மார்க்கெட் இருக்கும் இந்தச் சமயத்தில் இந்த ஓவியத்தை ஏலத்தில் விட்டால் சரியாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.
The Rest on the Flight into Egypt ஓவியம் வரலாற்று மிக்க பல உரிமையாளர்களின் கைகளில் இருந்துள்ளது.
இதனை ஒரு முறை ஆஸ்டிரியன் அரசர் ஜோசப் II உரிமை கொண்டாடியுள்ளார் மற்றும் வியன்னாவின் பெல்வடியர் அரண்மனையில் கூட இருந்துள்ளது Belvedere Palace.
1809-ஆம் ஆண்டில் பாரிஸிலுள்ள நெப்போலியன் மியூசியத்தில் வைப்பதற்காக பிரெஞ்சு படைவீரர்கள் ஓவியத்தைத் திருடியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இதனை ஸ்காட்டிஷ் நில உரிமையாளர் ஒருவர் வைத்திருந்தார். பின்னர் 1878-இல் ஓவியம் கிறிஸ்டி ஏலத்தில் நான்காவது மார்க்கஸ் ஆஃப் பாத்துக்கு கொடுத்தார்.
அந்த சமயத்தில் ஓவியம் 35,000 பவுண்டுகள் அல்லது தோராயமாக 35 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக அது 1995இல் லாங்லியட் எஸ்டேட் ஹோமில் இருந்து திருடப்பட்டது. பின்னர் 2002 ஆம் ஆண்டில் டிடெக்டிவ் சார்லஸ் ஹில் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
