நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

BREAKING NEWS: ரிஷி சுனக்கின் கட்சி வீழ்ந்தது; கியொ் ஸ்டாா்மரின் தொழிலாளர்  கட்சி ஆட்சி அமைகின்றது 

லண்டன்: 

ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை என்ற நிலையில் கியொ் ஸ்டாா்மரின் தொழிலாளர் கட்சி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், 90 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு  பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில்  பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். அவருக்கு பின்னர் ரிஷி சுனக் பிரதமராக தேர்வானார். 

இந்தத் தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன் கிடைத்த தகவலின்படி  கியொ் ஸ்டாா்மரின் தொழிலாளர்  கட்சி ஆட்சி அமைகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset