நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் தயாரிக்கப்படும் மின்வாகனங்களுக்கு 45% வரை வரி விதிக்கப்படும்

பெய்ஜிங்:

சீனாவில் தயாரிக்கப்படும் மின்வாகனங்களுக்கு 45 விழுக்காடு வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருக்கிறது.

புதிய தீர்வை அடுத்த மாதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் கணிசமான நாடுகள் சீனாவுக்கு எதிராக வரியை உயர்த்த இணங்கின.

12 நாடுகள் வாக்களிப்பில் பங்குபெறவில்லை என்று கூறப்படுகிறது.

10 நாடுகள் ஆதரித்தன. 5 நாடுகள் எதிர்த்தன.

ஜெர்மனி உள்ளிட்ட 5 நாடுகள் வரி உயர்வை எதிர்த்து வாக்களித்தன.

சீனாவின் வர்த்தகத் தொழிற்சபை இதெல்லாம் தன்னைப்பேணித்தனம் என்று குறை கூறியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset