நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை – இஸ்ரேல் அனைத்து விமான சேவைகளும் இரத்து

கொழும்பு:

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதல்களால் டெல் அவிவ் விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதே இதற்குக் காரணம்.

எதிர்வரும் 7ஆம் தேதிக்கு முந்திய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளை திட்டமிட்டுள்ளவர்கள் உரிய தேதிகளை மாற்றியமைக்குமாறு தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஏதேனும் அபாயகரமான சூழ்நிலை ஏற்படின் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset