நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரிஷி சுனக் மோசமாக பின்தங்கியுள்ளார்: கீர் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார்

லண்டன்: 

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார். அவர் பிரதமராகும் சூழல் கணிந்துள்ளது. பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ரிஷி சுனக் படுமோசமாக பின்தங்கியுள்ளார்.

கீர் ஸ்டார்மர் அவர் போட்டியிட்ட லண்டன் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், “நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள்; இனி நாங்கள் பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என வாக்காளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

230+ தொகுதிகளில்.. இந்தத் தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சியான லேபர் கட்சி 418 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மொத்தம் உள்ள 650-ல் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி கீர் ஸ்டார்மர் தரப்பு 230+ தொகுதிகளிலும், ரிஷி சுனக் தரப்பு வெறும் 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset