நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக பிரச்சார ஊழியரிடம் போலிஸ் விசாரணை: சைபுடின் நசுதியோன்

நிபோங் திபால்:

பெண் பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக தேர்தல் ஆணைய பிரச்சார ஊழியரிடம் போலிஸ் விசாரணை நடத்துவார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

சுங்கை பாக்காப் இடைத் தேர்தலை முன்னிட்டு சுங்கை கெச்சில் எனும் பகுதியில் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் தேர்தல் ஆணைய பிரச்சார கண்காணிப்பு அதிகாரி குறித்து தற்போதுள்ள சட்டத்தின்படி போலிசார் விசாரணை நடத்துவார்கள் என்றார் அமைச்சர் 

கூட்டத்தில் பெண் பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் தேர்தல் ஆணைய பிரச்சார கண்காணிப்பு ஊழியர் குறித்து தற்போதுள்ள சட்டத்தின்படி போலிசார் விசாரணை நடத்துவார்கள்.

இந்த சம்பவம் குறித்து இதுவரை தனது தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் விசாரணை சரியான முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset