நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் கடத்தியதற்காக தொழிலாளருக்கு 30 ஆண்டுகள் சிறை, 12 கசையடி

கோலா தெரங்கானு: 

299.17 கிராம் எடையுள்ள methamphetamine வகை போதைப் பொருளை கடத்திய தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 கசையடிகளும் வழங்க திரங்கானு உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளித்தது. 

நீதிபதி Datuk Hassan Abdul Ghani குற்றம் சாட்டப்பட்ட 32 வயதான Mohd Firdaus Mohd Zahid-க்கு எதிராக இந்தத் தீர்பை வழங்கினார்.

தனக்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து நிரூப்பிக்க தவறியதால் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.

திகுற்றம் சாட்டப்பட்டவர் 299.17 கிராம் எடையுள்ள methamphetamine வகை போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை 4.50 மணியளவில் Hentian Rehat & Rawat (R&R) Perasing Jabor-உள்ள பெரோடுவா வீவா காரில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B(1)(a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அதே சட்டத்தின் பிரிவு 39B(2) இன் கீழ் தண்டிக்கப்படலாம்.

அக்குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 12 கசையடிகளுக்குக் குறையாதத் தண்டனை விதிக்கப்படலாம்.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுத் துணை வழக்கறிஞர்கள்  Amer Abu Bakar Abdullah மற்றும் Mohd Khairuddin Idris ஆகியோரால் இந்த வழக்குத் தொடரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் கசாலி இஸ்மாயில் ஆஜரானார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset