நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் மாவட்டக் கால்பந்து சங்கத்தின் கால்பந்து போட்டியில்  100 தமிழ்ப்பள்ளி அணிகள் பங்கேற்பு: பத்துமலை

ஷாஆலம் :

பெட்டாலிங் மாவட்டக் கால்பந்து சங்கத்தின் கால்பந்துப் போட்டியில் மொத்தம் 100 தமிழ்ப்பள்ளி அணிகள் பங்கேற்கவுள்ளன என்று அச்சங்கத்தின் தலைவர் பத்துமலை  கூறினார்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தினர் 20 ஆம் ஆண்டாக சிலாங்கூர், கூட்டரசு பிரதேச மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கால்பந்து போட்டி வரும் ஜூலை 13ஆம் தேதி சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறவுள்ளது.

May be an image of 9 people and text

இன்னும் ஒரு வாரத்தில் போட்டி நடைபெறவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக இவ்வாண்டு  100 தமிழ்ப்பள்ளி அணிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன என்று பத்துமலை கூறினார்.

இதனிடையே போட்டியில் பங்கேற்கும் 6 தமிப்பள்ளி அணிகளுக்கு ஜெர்சிகளை செக்கினா பிஆர் நிறுனத்தின் இயக்குநர் கிறிஸ்டபர் ராஜ் வழங்கினார்.

அதே வேளையில் டச் துரோனிக்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ ரவீந்திரன் இப்போட்டிக்கு முதன்மை ஆதரவாளராக உள்ளார்.

இவ்வேளையில் அவர்களுக்கு நன்றி என்று சங்கத்தின் துணைத் தலைவர் கென்னத் கண்ணா கூறினார்.

பெட்டாலிங் மாவட்டக் கால்பந்து சங்கம் மிகப் பெரிய செலவில் இப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆகையால் இப்போட்டிக்குப் பள்ளிகள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தர வேண்டும் என்று மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றத்தின் தலைவர் பாண்டியன் கேட்டுக் கொண்டார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset