நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெட்ரிகுலேஷனில் இந்திய மாணவர்களுக்கு 2,500 இடங்களை ஒதுக்கி விடுங்கள்: இந்திய அமைப்புக்கள் வேண்டுகோள் 

கோலாலம்பூர்:

மெட்ரிகுலேஷன் பயில இந்திய மாணவர்களுக்கு 2,500 இடங்களை ஒதுக்கி விடுங்கள் என்று ஆகம மணி தலைவர் அருண் துரைசாமி மற்றும் இந்திய அமைப்புக்கள் இன்று வேண்டுகோளை முன் வைத்தன.

கடந்த 2017 அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் பயில 2,500 இடங்களை வழங்கினார்.

இப்போது உள்ள மடானி அரசாங்கம் இந்த 2,500 இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

நஜிப் காலத்தில் 2162 இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், கடந்தாண்டு மட்டும் 1116 மெட்ரிகுலேஷன் இடங்கள் மட்டுமே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 

1500 இடங்கள் ஒதுக்கப்பட்ட வேளையில் வெறும் 1116 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

எஸ்.பி.எம் தேர்தல் 10ஏ மற்றும் அதற்கும் மேல் ஏ பெறும் மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பயில வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் அறிவித்தது நன்மை என்றாலும் அது இந்திய சமுதாயத்திற்குப் பலனளிக்காது என்று அவர் குறிப்பிட்டார். 

மலேசிய தமிழ் பள்ளிகள் ஒருங்கிணைப்பு பேரவை தலைவர் வெற்றி வேலன் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இதர இந்திய அமைப்புகளும் இதை ஆணித்தரமாக வலியுறுத்தின

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset