நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டைய்மின் வழக்கு: நீதிமன்ற இடமாற்ற விண்ணப்பம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஆய்வு செய்யப்படும்

கோலாலம்பூர்: 

முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஜைனுடின் சொத்துக்களை அறிவிக்கத் தவறிய வழக்கை மற்றொரு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 9-ஆம் தேதி விசாரிக்க கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று முடிவு செய்துள்ளது.

கடந்த மே 7-ஆம் தேதி டைய்ம் தாக்கல் செய்த இடமாற்ற விண்ணப்பம் தொடர்பான முடிவுக்காக அவரது தரப்பு இன்னும் காத்திருப்பதாக அரசு  துணை வழக்கறிஞர் Mohamad Fadhly Mohd Zamry தெரிவித்ததையடுத்து நீதிபதி Azrul Darus தேதியை நிர்ணயித்தார்.

துன் டைய்ம் வழக்கு தொடர்பான பதில் பிரமாணப் பத்திரம் கடந்த மே 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

விண்ணப்பதாரரின் பதில் பிரமாணப் பத்திரம் கடந்த மே 30-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், டைய்ம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புரவேலன் ஆகஸ்ட் 9ஆம் தேதி தனது கட்சிக்காரரின் வருகையைத் தவிர்க்குமாறு கோரினார்.

இருப்பினும், அரசு துணை  வழக்கறிஞர் Datuk Wan Shaharuddin Wan Ladin வழக்கறிஞரின் விண்ணப்பத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு விசாரணை நடவடிக்கைகளில் டைய்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset