நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Beryl சூறாவளியின் அண்மைய நிலவரத்தை வெளியுறவு அமைச்சகம் கண்காணித்து வருகின்றது

கோலாலம்பூர்:

Beryl சூறாவளியின் அண்மைய நிலவரத்தை கியூபாவிலுள்ள மலேசியத் தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சகம்  கண்காணித்து வருகிறது. 

தற்போது கரீபியன் தீவுகள் வழியாகச் செல்லும் சூறாவளி இன்று ஜமாய்க்காவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹவானாவிலுள்ள மலேசிய தூதரகம்  ஜமாய்க்கா மற்றும் அருகிலுள்ள நாடுகளிலுள்ள மலேசியர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.

ஜமாய்க்கா,அருகிலுள்ள பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் ஹவானாவிலுள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset