நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலக்கிடப்பட்ட டீசல் தொகையால் 87 விழுக்காடு டீசல் கடத்தல் குறைந்துள்ளது: அர்மிசான் தகவல்

புத்ரா ஜெயா:

டீசலுக்கான உதவித் தொகை நீக்கப்பட்டதையடுத்து டீசல் எரிபொருள் பறிமுதல் 87 சதவீதம் குறைந்துள்ளது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி கூறினார்.

டீசல் மானிய இலக்கு செயல்படுத்தப்படுவதற்கு முன்னும் பின்னும் இருந்த 20 நாட்களின் ஒப்பீட்டின் அடிப்படையில் பறிமுதல் நடவடிக்கை குறைந்திருப்பதைக் காண முடிகின்றது. 

கடந்த மே 20 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், 520,803 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே சமயம், ஜூன் 10-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை  68,457 லிட்டர் டீசல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டீசல் வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதே காலக்கட்டத்தில் 40 பேரிலிருந்து ஒரு நபராக குறைந்துள்ளது.

ஜூன் 10 முதல், தீபகற்ப மலேசியா முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் டீசல் எரிபொருளின் சில்லறை விலையை லிட்டருக்கு RM3.35 என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

அதே நேரத்தில் சபா, சரவாக் மற்றும் லாபுவான் எரிபொருளின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.15 ஆக உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset