நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா பள்ளிவாசலில் தியாகப் பெருநாள் தொழுகையில் பிரதமர் கலந்து கொண்டார்

புத்ராஜெயா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் 20,000க்கும் மேற்பட்டோருடன் தியாகப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டார்.

பிரதமர் தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் காலை 7.52 மணிக்கு பல்லைவாசலை வந்தடைந்தார்.

அவர்களை பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரங்களின் துணையமைச்சர்  டாக்டர் சுல்கிஃப்லி ஹசன் வரவேற்றார்.

புத்ரா பள்ளிவாசலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களால் நிரம்பத் தொடங்கியது.

அவர்கள்  தொழுகையின் சூழலைக் காணும் வாய்ப்பைத் தவறவிடவில்லை.

தொழுகைக்கு பிறகு பிரதமர் பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பலரும் அவருடன் படம் பிடிக்க விரும்பி அணுகினர். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset