நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 மாநிலங்கள் எம்ஏசிசியின் தங்கச் சுரங்கங்கள்: அசாம் பாக்கி

புத்ராஜெயா:

நாட்டின் 5 மாநிலங்கள் எம்ஏசிசியின் தங்கச் சுரங்கங்களாக உள்ளன என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), ஜொகூர், சிலாங்கூர், பினாங்கு, சபா, சரவா ஆகிய ஐந்து மாநிலங்களை ஏஜென்சியின் தங்கச் சுரங்கங்கள் என்று பட்டியலிட்டுள்ளது.

தங்கச் சுரங்கங்கள் என்ற சொல், நாடு அதிக வருமானத்தை நோக்கிச் செல்ல உதவும் முயற்சியில் மூலோபாய தலையீடு தேவைப்படும்.

மேலும் பொருளாதார, ஊழல் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய மாநிலங்களைக் குறிக்கிறது.

தங்கச் சுரங்கம் என்ற வார்த்தையின் அர்த்தம் நாம் மக்களைக் கைது செய்ய விரும்புகிறோம் என்பதல்ல.

மாறாக நாம் தீர்க்க உதவ வேண்டிய பொருளாதாரப் பிரச்சினைகள், ஊழல் பிரச்சினைகளைப் பார்க்க விரும்புகிறோம்.

ஊழலைத் தடுப்பதில் எம்ஏசிசியின் பங்கு உண்மையில் நமது பொருளாதாரத்தை ஒரு நாள் அதிக வருமானம் கொண்ட நாடாக மாற்ற உதவுவதாகும் என்பதை நான் முன்பு குறிப்பிட்டுள்ளேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset