நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவிற்கு 5,207 ஹெக்டேர் நிலம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை விளக்க வேண்டிய அவசியமில்லை: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவிற்கு 5,207 ஹெக்டேர் நிலம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அரசாங்கம் 5,207 ஹெக்டேர் நிலத்தை இந்தோனேசியாவிற்கு ஒப்படைத்ததாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

இது குறித்து நாடாளுமன்றத்தில் உட்பட எந்த விளக்கமும் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தக் கூற்றைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுபோன்ற அவதூறுகளைச் சொல்லத் தயாராக இருப்பதாகவும், இதனால் பேச்சு சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் அவர் கடுமையாக சாடினார்.

இது எதிர்க்கட்சிகளின் பிரச்சனை. அவர்கள் பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள். பொய் சொல்கிறார்கள்.

இஸ்லாத்தைப் பயன்படுத்துகிறார்கள். இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.

இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள், பொய்யான உண்மைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset