நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயுதப்படையின் புதிய தளபதியாக மாலேக் ரசாக் நியமனம்

கோலாலம்பூர்:

ஆயுதப்படைகளின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் டத்தோ மாலேக் ரசாக் சுலைமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலித் நோர்டின் கூறினார்.

மாலேக் ரசாக்கின் பதவி உயர்வு, அதைத் தொடர்ந்து பிஏடியாக நியமனம் செய்ய மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஜனவரி 29 அன்று கூடிய 633ஆவது ஆயுதப்படை நிர்வாக கூட்டத்தின் பரிந்துரையின்படி இந்த நியமனம் செய்யப்பட்டது.

பின்னர் ஜனவரி 30 அன்று மாமன்னரின் ஒப்புதல் பெறப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset