நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்லின மக்களின் ஒன்றுகூடலைக் கண்டு பிரதமர் மகிழ்ச்சி

கோலாலம்பூர்:

பல்வேறு இனங்கள், கலாச்சாரங்களைச் சேர்ந்த மலேசிய மக்கள் ஒன்றிணைந்து நேற்று இரவு நடைபெற்ற “Cerita Malaysia Kita” நிகழ்ச்சியில் பங்கேற்றதைக் கண்டு, பிரதமர் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 2026 மலேசியா சுற்றுலா ஆண்டை (TMM2026) முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி நாட்டின் அடையாளமாகத் திகழும் பன்முகக் கலாச்சாரம், இயற்கை அழகு, வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றின் பெருமையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது என்று டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.

ஆகையால், இம்மாதிரியான நிகழ்ச்சிகள், நாட்டின் மிகப்பெரிய பலம் வலுவான ஒற்றுமையில்தான் உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதாக அவர் தெரிவித்தார்.

“மலேசிய நாட்டின் ஒற்றுமை பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். தற்போது நாட்டின் பொருளாதாராமும் நல்ல முன்னேயேற்றத்தைக் காட்டினாலும், அது எளிதில் கிடைப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

“எனவே, இதற்கு உறுதியான மனப்பாங்கு, ஒத்துழைப்பு, நம்பிக்கை தேவை. நாம் இதை செய்ய முடியும் என்பதோடு மட்டுமல்ல, முழு முயற்சியுடன் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் அவசியம்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்குச் சுற்றுலா துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

அதற்கு மலேசிய மக்களும் ஒன்றிணைந்து ஒழுக்கமானப்  பண்புகளையும் நாட்டின் சிறந்த பண்பாட்டு, கலாச்சாரங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நமது நற்குணம், பணியியல் ஒழுக்கம், சேவை மனப்பான்மை ஆகியவை மலேசியாவை உலகின் பார்வைக்குகே கொண்டுச் செல்ல வேண்டும்.

“ஆகவே, அனைவரும் தங்களின் பங்கினைச் சிறப்பாகச் செய்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும். மலேசியா ஒன்றிணைந்து, உறுதியாக முன்னேற வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset