
செய்திகள் மலேசியா
MM2H திட்டத்தின் புதிய பங்கேற்பாளர்களுக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி கிடையாது: சுற்றுலா அமைச்சர்
கோலாலம்பூர்:
மலேசியா எனது இரண்டாவது வீடு (எம்எம்2எச்) எனும் திட்டத்தின் புதிய பங்கேற்பாளர்கள், நிரந்தரவாசத்துக்கு (Permanent Resident) விண்ணப்பிக்கத் தகுதி பெற மாட்டார்கள் என்று சுற்றுலா அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்தார்.
எம்எம்2எச் திட்டத்தில் உள்ள பிளாட்டினம், கோல்ட், சில்வர் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் இது பொருந்தும்.
ஃபேஸ்புக் பதிவில் எம்எம்2எச் திட்டத்தின் புதிய பங்கேற்பாளர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
புதிய அணுகுமுறையால் இலக்கு வைக்கப்பட்டவர்களை அதிகம் ஈர்க்க முடியும் என தமது அமைச்சு நம்புவதாகவும் அவர் சொன்னார்.
குறிப்பாக, நிகர சொத்து மதிப்புடைய தனிப்பட்டவர்கள், முன்னணி மின்னிலக்க தொழில்நுட்ப நிபுணர்கள் போன்றோருக்கு அவர்கள் விரும்பும் முதல் இடமாக மலேசியாவை ஆக்குவது எம்எம்2எச் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்தகைய பிரிவினர் இருப்பதால் உள்ளூர் பொருளியல் மேம்படும் என்பது மலேசியாவின் எதிர்பார்ப்பாகும்.
குறிப்பாக, சுற்றுலா, வீடமைப்பு, கல்வி, மருத்துவத் தொழில்களில் மலேசியாவை போட்டிமிகுந்த உலகளாவிய மையமாக்கும் என்று அமைச்சர் தியோங் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm