நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ கல்லுமலை தைப்பூச விழா: இரத ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது

ஈப்போ:

ஈப்போ கல்லுமலை தைப்பூச விழா இரத ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

காலை 5 மணிக்கு புந்தோங் சுங்கை பாரி வழியில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர் காலை மணிக்கு இரத புறப்பாடு நடைபெற்றது.

இந்த ஆண்டு இரத ஊர்வலத்தில கட்டுகடாங்க பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்ததாக ஈபபோ இந்து தேவஸ்தான பரிபாலன சபா செயலாளர் வி.எம். தியாகராஜன் கூறினார்.

விடுமுறையில் தைப்பூசம் நடைபெறுவதால் இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

விழாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் , மாநகர் மன்றத்தின் துப்பரவுத் தொழிலாளர்களின் பணியும் சிறப்பாக இருந்தது.

இரத ஊர்வலத்தில் உடன் வரும்  பக்தர்களுக்கு பொது மக்கள் காலை சிற்றுண்டி, குளிர்பானங்களை வழங்கினர்.

இரத்ததை பின் தொடர்த்து வந்த பக்தர்கள் பலர் பால்குடம் ஏந்தி வந்தனர். இன்னும் பலர் பக்தி பரவசத்தில் முருகனின் திருப்பாடால்களை பாடி வந்தனர்.

குகை ஆலந்ததை வந்தடைந்த முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இரதம் மீண்டு குகை ஆலயத்தில் இருந்து 2-2-26. இல் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு திரும்பும் என்று தியாகராஜன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset