
செய்திகள் மலேசியா
கேளிக்கை விடுதியில் கைகலப்பில் ஆடவர் மரணம், மற்றொருவர் மருத்துமனையில் அனுமதி
கோத்தா கினபாலு:
கேளிக்கை விடுதியில் கைகலப்பில் ஆடவர் மரணமடைந்தார். மற்றொருவர் மருத்துமனையின் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் அதிகாலை 2 மணியளவில் கோத்தா கினபாலு ஜாலான் பண்டாரன் பெர்ஜாயாவில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து கேளிக்கை மையத்தில் பணி புரியும் ஒருவரிடமிருந்து இந்த சம்பவம் குறித்து போலிசுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இக்கைகலப்பு நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு இலக்கான 20 வயது ஆடவர் மரணமடைந்தார்.
மற்றொரு 20 வயது ஆடவர் குயின் எலிசபெத் மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை கோத்தா கினாபாலு மாவட்ட போலிஸ் தலைவர் காசிம் மூடா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am