நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் பாலோங் ஶ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

கெமாஸ்:

கம்போங் பாலோங் ஶ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

நெகிரி செம்பிலான் கெமாஸ் வட்டாரத்தில் புகழ் பெற்ற ஆலயமாக இந்த ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் விளங்குகிறது.

ஆலயத்தின் திருப் பணிகளுக்கு பின் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

காலை முதல் நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின் ஆலய கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ என். சிவக்குமார் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset