
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் திறன் ஆண்டு 2025ஐ முன்னெடுத்து நடத்த மலேசியா விரும்புகிறது: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
ஆசியான் திறன் ஆண்டு 2025ஐ முன்னெடுத்தி நடத்த மலேசியா விருப்பம் கொண்டுள்ளது.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
அனைத்துலக தொழிலாளர் அமைப்புடன் இணைந்து ஆசியான் திறன் ஆண்டு 2025ஐ நடத்த மலேசியா விரும்புகிறது.
மனிதவள அமைச்சு, அதன் கீழ் செயல்படும் எச்ஆர்டி கோர்ப் போன்ற ஏஜென்சிகள் வாயிலாக ஆசியான் பணியாளர்களின் திறன்கள், அறிவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளுக்கு வழிவகுக்கும்.
ஆசியான் திறன்கள் ஆண்டு 2025 மூலம் இந்த இலக்கை அடைவதில் அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, அனைத்து ஆசியான் தலைவர்களுடன் ஒத்துழைக்க மலேசியா பெருமைப்படும்.
அடையாளம் காணப்பட்ட திட்டங்களின் மூலம், நமது பணியாளர்களின் நிபுணத்துவம், உற்பத்தித்திறனை மேம்படுத்த, அறிவைப் பரிமாறிக் கொள்ளலாம்.
மேலும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் நாம் உதவ முடியும்.
கூடுதலாக, மனித மூலதனத்தை மேம்படுத்துவதற்கான நீண்டகால உத்திகளை செயல்படுத்துவதில் உறுப்பு நாடுகளிடையே வலுவான ஒத்துழைப்பையும் கூட்டாண்மையையும் உருவாக்க முடியும்.
புரூணை, சிங்கப்பூர், இந்தோனேசியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட ஆசியான் தலைவர்களுக்கு இடையே ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டு கலந்துரையாடல் அமர்வில் அமைச்சர் ஸ்டீவன் சிம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:41 am
மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் பயணம்
October 15, 2025, 8:04 am
தாய்லாந்து - கம்போடியா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கோலாலம்பூரில் கையெழுத்தாகலாம்: ஹசான்
October 14, 2025, 9:43 am
மியான்மருக்கு தேர்தல் பார்வையாளர்களை ஆசியான் அனுப்பாது: ஹசான்
September 29, 2025, 9:40 am
ஆசியான் தகுதியின் அடிப்படையில் மலேசியாவிற்கு வருகை புரிய டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது: ஃபஹ்மி
August 12, 2025, 10:29 pm
இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்
August 12, 2025, 10:26 pm
செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
July 27, 2025, 9:54 am