நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மக்களவை சபாநாயகர் தேர்தல்: ஆளும் - எதிர்க்கட்சிகளிடையே போட்டி

புது டெல்லி:

மக்களவை சபாநாயகருக்கான  தேர்தல் ஜூன் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைத்தது.

எதிர்க்கட்சிகளின் "இந்தியா' கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய ஆதரவு கட்சியாக தெலுங்கு தேசமும் சபாநாயகர் பதவியை கோரி வருவதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியில் உள்ள ஆம் ஆத்மி தெலுங்கு தேசம் சபாநாயகர் பதவியைப் பெற ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியா கூட்டணியும் சபாநாயகர் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதால் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

ஜூன் 27ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றி தொடக்கி வைக்கிறார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset