நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஊழியர்களின் மெத்தனத்தால் விமானம் மாறி பயணித்த உடல்பேறு குறைந்த தம்பதி

கோஸ்டா பிராவா:

ஆண்ட்ரூ கோரின் (Andrew Gore) 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாட கோஸ்டா பிராவாவுக்குப் (Costa Brava) பயணம் திட்டமிடப்பட்டது.

ஆண்ட்ரூவுடனும் அவரது மனைவி விக்டோரியாவுடனும் (Victoria) பயணம் செய்யவிருந்த மற்றவர்கள் பார்சலோனா (Barcelona) விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஆண்ட்ரூவும் விக்டோரியாவும் மட்டும் லித்துவேனியா (Lithuana)வில் தரையிறங்கினர்.

தவறான Ryanair விமானத்தில் ஏறியதால் அந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆண்ட்ரூ உடற்குறையடையவர் என்பதாலும் விக்டோரியாவுக்குத் தொடர்புத்திறன் குறைபாடு இருப்பதாலும் விமான நிலையத்தில் இருவரும் சிறப்புச் சேவையை நாடினர்.

அப்போது விமான நிலைய ஊழியர்கள் தம்பதியிடம் அவர்கள் சரியான விமானத்தில் இருந்ததாய்க் கூறியதாக BBC தெரிவித்தது.

விமான ஊழியர்களின் மெத்தனத்தால் விமானம் மாறி பயணித்த உடல்பேறு  குறைந்த தம்பதி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

அடுத்த நாள் இருவரும் பார்சலோனாவுக்குச் செல்ல விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அவர்களின் பயணப்பெட்டிகள் இரண்டு நாளுக்குப் பிறகுதான் சென்றடைந்ததாக தெரிகிறது 

அந்த அனுபவத்தை மறக்கமுடியாது என்றும் குடும்பத்தினர் அனைவரும் பதறிப்போயினர் என்றும் கோர் கூறினார்.

சிறப்புச் சேவையை நாடிய பயணிகளுக்கு எவ்வாறு தவறான விவரங்கள் தரப்பட்டன என்பதை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று Ryanair விமான நிறுவனம் கூறியது.

நடந்த சம்பவத்துக்கு நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

ஆதாரம்: BBC 

தொடர்புடைய செய்திகள்

+ - reset