நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை, பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து, உலக சாதனை படைக்கவுள்ள சிறுவன் ஹஸன் ஸலாமாவுக்கு பாராட்டு

கொழும்பு:

நாளை மறுதினம் (ஜூன் 15) இந்தியாவின் (இராமேஸ்வரம்) தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையிலான, 32 km நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து, உலக சாதனை படைக்கவுள்ள சிறுவன் ஹஸன் ஸலாமாவுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, ஜமாலியாவில் உள்ள சிறுவன் ஸலாமாவின் இல்லத்துக்கு நேரில் விஜயம் செய்த தலைவர் ரிஷாட், அவரை வாழ்த்தியதோடு, பரிசுத்தொகை ஒன்றையும் வழங்கி சிறப்பித்தார்.

இதன்போது, மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான Dr. ஹில்மி மொஹிதீன், தௌஃபீக் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset