
செய்திகள் மலேசியா
இலங்கையில் கம்பன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் இலக்கிய உரையாற்றுவார்
கோலாலம்பூர்:
நான்கு வருடங்களுக்குப் பிறகு இலங்கைத் தலைநகர் கொழும்பில் மலரும் கம்பன் விழாவில் கெளரவ விருந்தினராக பைந்தமிழ்ச்சுடர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றவுள்ளார்.
அதனை முன்னிட்டு இன்று அவர் இலங்கை புறப்படுகிறார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் உலகத் தமிழர்கள் கொண்டாடும் சிறப்புரைகளை பல நாடுகளிலும் சொற்பொழிவாற்றி வருகிறார்
உலகின் எந்த மூலை முடுக்கானாலும் தமிழும், தமிழ் சார்ந்த உறவுகளும் இருக்கும் இடத்தில் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே இருப்பதைப் பல வேளைகளில் நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் 4 ஆண்டுகளுக்குப் பின் மலரும் கம்பன் விழா மிகவும் விமரிசையாக, உள்நாட்டு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களின் வருகையால் களை கட்டவிருக்கிறது.
அந்த விழாவில் கலந்துகொள்ள தனது குழுவோடு புறப்படும் டத்தோஸ்ரீ சரவணன் மலேசியத் தமிழர்களின் பெருமையை கடல் கடந்தும் நிலைநாட்டி வருகிறார் என்பதில் ஐயமில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2025, 12:40 pm
நூருல் இசா அன்வார் பிகேஆர் கட்சியின் தளபதி ஆவார்: ஃபட்லினா சிடேக் கருத்து
May 14, 2025, 5:14 pm