நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.எச்.17 விமானம் தொடர்பான விவகாரம்: புதினிடம் கலந்துரையாடினார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 

மாஸ்கோ: 

2014ஆம் ஆண்டு எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதினுடன் இந்த விவகாரத்தைப் பற்றி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துரையாடினார். 

ரஷ்யா அதிபர் புதினுடன் பன்முக வர்த்தக கலந்துரையாடலின் போது அன்வார் எம்.எச்.17 விவகாரத்தைப் பற்றி பேசினார். 

எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பில் புதின் பொறுமையாக தாம் கூறியதைக் கேட்டததாகவும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் மனநிலைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார் என்றும் பிரதமர் அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மேலும், ICAO அமைப்பின் அண்மைய அறிக்கை தொடர்பில் புதினுடன் கலந்துரையாடினார். அந்த அறிக்கையின் இறுதியில் எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது ரஷ்யா தரப்பு தான் காரணம் என்று குறிப்பிட்டது. 

முன்னதாக, மே 13ஆம் தேதி முதல் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ரஷ்யா நாட்டிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மரியாதை நிமித்தமாக ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதினைச் சந்தித்து பேசினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset