நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா போரை நிறுத்த அமெரிக்காவின் ஒப்பந்தத்துக்கு ஐ.நா, ஒப்புதல்

நியூயார்க்:

காசாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்துள்ள மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

போர் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது இதுவே முதல்முறை.

இந்த ஒப்பந்த திட்டத்தை இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஏற்குமா என்பது சந்தேகம் நீடித்துவருகிறது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து 15 உறுப்பு நாடுகள் வாக்களித்தன; ரஷியா வாக்களிப்பைப் புறக்கணித்தது; தீர்மானத்தை எதிர்த்து ஒரு நாடு கூட வாக்களிக்கவில்லை. அதையடுத்து அந்தத் தீர்மானம் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை வரவேற்பதாக  ஹமாஸ் அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset