
செய்திகள் உலகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பு: 25 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு
வாஷிங்டன் டி சி:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) நாட்டுக்கு அதிபராக இருந்தாலும் அவரும் ஒரு மகனுக்குத் தந்தைதான் என்று கூறினார்.
அவரது மகன் ஹன்டர் பைடனுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு அவர் பேசினார்.
தம் மகனுக்குத் தமது அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு என்று அவர் சொன்னார்.
அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) துப்பாக்கி சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஹன்டர், கொக்கேய்ன் (Cocaine) போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தபோது ஒரு .38 கைத்துப்பாக்கியை வாங்கினார்.
துப்பாக்கியை வாங்கும்போது தாம் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று 54 வயது ஹன்டர் பொய் சொன்னதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்தது உட்பட அவர் மீது 3 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
மூன்றிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அதிகபட்சம் 25 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால் அவர் முதல்முறை குற்றவாளி என்பதால் சிறைத்தண்டனை விதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
தண்டனை அடுத்த சில மாதங்களில் அறிவிக்கப்படலாம்.
அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் அதிபரின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
அதிபர் பைடன் மகனுக்கு எதிரான வழக்கின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்ற நடைமுறையை மதிப்பதாகவும் கூறினார்.
ஹன்டர் பைடன் ஒரு வழக்கறிஞர். பிரபல யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm